Site icon Tamil News

பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டது

பேருந்து பயணிகளுக்கான கட்டணத்தை 5 வீதத்தால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் கெமுனு விஜேசிங்க இன்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனை அறிவித்தார்.

இதன்படி, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் இரண்டு ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய கட்டணம் 28 ரூபாவாகும். இந்த கட்டண திருத்தம் ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது.

வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் பேருநு்து சங்கங்கள் மற்றும் அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version