Site icon Tamil News

கருங்கடல் தானிய ஒப்பந்தம் நிறைவு : உக்ரைனை விட்டு வெளியேறும் இறுதி கப்பல்!

தற்போதைய கருங்கடல் தானிய ஒப்பந்தத்தின் கீழ் இறுதிக் கப்பல் உக்ரைனை விட்டு வெளியேறவுள்ளது.

DSM Capella என்ற கப்பல்  30,000 டன் சோளத்தை சுமந்து கொண்டு சோர்னோமோர்ஸ்க் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு துருக்கியை நோக்கிச் சென்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

ஐநா தரகு ஒப்பந்தம் கடந்த ஜூலை முதல் உக்ரேனிய தானியங்களை பாதுகாப்பான ஏற்றுமதிக்கு அனுமதித்துள்ளது. இந்த ஒப்பந்தம் நாளை முதல் காலாவதியாகவுள்ளது.

இதனையடுத்து இந்த ஒப்பந்தத்தை நீட்டிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையிலும், ரஷ்யா ஒப்புக்கொள்ளவில்லை.

இந்நிலையில், மொஸ்கோவின் படையெடுப்பால் உலகலாவிய ரீதியில்  உணவு நெருக்கடி மோசமடையக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

Exit mobile version