Site icon Tamil News

அயோத்தி ராமர் கோவில் கட்டுமான வடிவமைப்பில் ஏற்பட்ட சிக்கல்: அர்ச்சகர்கள் புகார்

கனமழை காரணமாக உத்தர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள அயோத்தி ராமர் கோயிலின் கருவறையின் மேற்கூரையின் மழைநீர் ஒழுகுவதாக கோயிலின் அர்ச்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கோவிலின் வடிகால் வசதியும் முறையாக இல்லை என்றும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மழைநீர் வடிவதன் காரணமாக பகவான் ராமருக்கு அபிஷேகம் செய்வது மிகுந்த சிரமமான காரியமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

கோவிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சாரிய சத்யேந்திர தாஸும் இதனை உறுதி செய்துள்ளார்.

பக்தர்கள் நின்று சுவாமி தரிசனம் செய்யும் இடத்தில் உள்ள தளத்தில் இருந்து மழைநீர் கசிகிறது. இதனை கோவில் கட்டுமான கமிட்டி குழுவின் கவனத்துக்கு கொண்டு சென்று உள்ளோம். அவர்கள் அதனை அடுத்த சில நாட்களில் சீர் செய்வதாக தெரிவித்துள்ளனர்.

கோவிலின் கட்டுமான வடிவமைப்பு காரணமாக சில இடங்களில் மழை நீர் கசிகிறது. அதே நேரத்தில் சில இடங்களில் கட்டுமான பணிகள் நிறைவடைந்த பின்னர் மழை நீர் கசிவு இருக்காது என ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர தலைவர் நிருபேந்திர மிஸ்ரா கூறியுள்ளார்.

ராமர் கோயில் கட்டுவதற்கு ரூ.1,800 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மதிப்பிடப்படுகிறது. ராமர் கோயில் வளாகத்தின் பரப்பளவு 70 ஏக்கர் ஆகும். அதில் 2.7 ஏக்கர் பரப்பளவில் 161 அடி உயரத்தில் பிரதான கோயில் அமைந்துள்ளது. 12 நுழைவாயில்களும் 3 தளங்களும் கொண்டதாக இது கட்டப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகளை எல்&டி மற்றும் டாடா கன்சல்டிங் இன்ஜினீயர்ஸ் நிறுவனங்கள் மேற்

Exit mobile version