Tamil News

நீங்க இன்னும் அரண்மனை – 4 படத்தை பார்க்கலயா? இதோ ஓடிடி ரிலீஸ் திகதி அறிவிப்பு

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் சுந்தர். சி. தமிழ் சினிமாவிற்கு பல நல்ல திரைப்படங்களை கொடுத்துள்ளார்.

அவர் இயக்கிய படங்களில் அரண்மனை 1,2,3 போன்ற படங்கள் மாபெரும் வெற்றி படங்களாக அமைந்தன.

இந்நிலையில் அடுத்ததாக சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் கடந்த மே 3ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. இதில் தமன்னா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க சுந்தர். சி தமன்னாவிற்கு அண்ணனாக நடித்திருந்தார்.

மேலும் ராஷி கண்ணா, கோவை சரளா, யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ரசிகர்களின் பேராதரவை பெற்ற இந்த படம் வெளியான நாள் முதலே பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வசூலிலும் 100 கோடியை தாண்டி இந்தாண்டின் முதல் வெற்றிபெற்ற தமிழ் படமாக அமைந்தது.

இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசை அமைத்திருந்த நிலையில் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகின. 30 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றி நடை போடும் இந்த படமானது வருகின்ற ஜூன் 21ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version