Site icon Tamil News

இலங்கை: வர்த்தகர் கிளப் வசந்த கொலைச் சம்பவம்: மற்றுமொரு சந்தேகநபர் கைது

வர்த்தகர் கிளப் வசந்த கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பொலிஸாரின் கூற்றுப்படி, சந்தேக நபர் கொலையுடன் தொடர்புடைய ஆயுததாரிகளை கொண்டு செல்வதற்கும், வெடிமருந்துகளில் KPI என்ற எழுத்துக்களைக் குறிப்பதற்கும் உதவி செய்துள்ளார்.

சந்தேக நபர் தர்கா நகரில் வசிக்கும் 24 வயதுடையவர், அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் பணிபுரிந்தவர்.

ஜூலை மாதம் அதுருகிரியவில் பச்சை குத்தும் கடையொன்றின் ஒன்றின் திறப்பு விழாவில் கலந்துகொண்டிருந்த சுரேந்திர வசந்த பெரேரா என்ற கிளப் வசந்தா மற்றும் மற்றுமொரு நபர் இனந்தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

டாட்டூ நிலையத்தின் உரிமையாளர் உட்பட பல சந்தேக நபர்கள் துப்பாக்கிச் சூடு நடந்த உடனேயே கைது செய்யப்பட்டனர்.

ஆயுததாரிகளில் ஒருவர் ஆகஸ்ட் 23 ஆம் தேதி கைது செய்யப்பட்டார், மற்றையவர் ஆகஸ்ட் 28 ஆம் தேதி பாணந்துறை பின்வத்த பகுதியில் கைது செய்யப்பட்டார்.

ஆகஸ்ட் 29 அன்று, துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட துப்பாக்கிதாரி ஒருவருக்கும் கார் சாரதிக்கும் உதவி மற்றும் தங்குமிடத்தை வழங்கியதற்காக முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா கைது செய்யப்பட்டார்.

Exit mobile version