Site icon Tamil News

மணிப்பூர் கலவரத்தில் 40 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிப்பு!

மணிப்பூரில் இந்திய பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 40 கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பல்வேறு பழங்குடியின பிரிவைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களில் மெய்டீஸ் பிரிவைச் சேர்ந்த பழங்குடி அல்லாத சமூகத்தினர் தங்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி கோரிக்கை வைத்தனர்.

மெய்டீஸ் பிரிவினரின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பட்டியலின சமூகத்தை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், இந்த விவகாரம் கலவரமாக உருமாறியது.

இதனையடுத்து ஊரடங்கு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கலவரம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில்மணிப்பூரின் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு படையினருக்கும் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களிற்கும் இடையில் இடையே துப்பாக்கி சண்டை நடந்துள்ளது.

இதில்  40 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக அம்மாநில முதலமைச்சர் பைரன் சிங் கூறியுள்ளார்.

Exit mobile version