Site icon Tamil News

முகத்தை வட்டமிட்டு தெந்தரவு செய்த பூச்சி… கண் பார்வை இழந்த சீன நபர் !

தனது முகத்தை வட்டமிட்டு தொந்தரவு செய்த பூச்சியை அடித்ததால், தனது இடது கண் பார்வையை இழந்துள்ளார் சீனாவைச் சேர்ந்த வூ என்ற நபர்.

சீனாவின் தெற்கு மாகாணமான குவாங்டாங்கில் உள்ள ஷென்சென் நகரில் வசித்து வருபவர் வூ என்ற நபர். ஒரு நாள் இவரது முகத்தில் பூச்சி ஒன்று வெகுநேரமாக வட்டமிட்டபடி தொந்தரவு செய்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்த வூ தனது இடது கண்ணின் மீது அமர்ந்த பூச்சியை பலமாக அடிக்கவே , அவரின் இடது கண்ணில் அடி பலமாக விழுந்துள்ளது.

இதனையடுத்து, சில மணி நேரத்திற்கு பிறகு கண்களில் வலி ஏற்பட்டு, கண்கள் சிவக்க ஆரம்பித்துள்ளது. இதனால், அச்சமடைந்த அந்நபர், உடனடியாக மருத்துவரை அணுகியுள்ளார். அங்கு இவரை சோதனை செய்த மருத்துவர்கள் , இவர், கான் ஜூன்க்டிவிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மருத்துகளை உட்கொள்ள ஆரம்பித்துள்ளார். ஆனால், அது அவரின் நோயை கட்டுப்படுத்தவில்லை.

இதனால், அவரின் கண்களை சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான புண் ஏற்பட்டுள்ளது. மீண்டும் மருந்துகள் எடுத்தால் கூட அதை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு, தொற்று அதிகரித்து கண்பார்வை திறன் குறைய தொடங்கியுள்ளது. இதே நிலை தொடர்ந்தால், இது மூளையே பாதிக்கும் என்பதால் மருத்துவர்கள் அவரது இடது கண்களின் கரு விழியையே அகற்றியுள்ளனர்.

மேலும், இவரை கடித்த பூச்சி வடிகால் ஈ (dry fly) என்பது கண்டறியப்பட்டுள்ளது. இது பொதுவாக குளியலறை, குளியல் தொட்டிகள், சமையலறை போன்று வீடுகளில் உள்ள இருண்ட மற்றும் ஈரமான பகுதிகளில் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இது போன்ற மற்றொரு சம்பவம் 2018-ஆம் ஆண்டிலும் சீனாவில் அரங்கேறியுள்ளது. அதில், 97 வயதான மூதாட்டி ஒருவருக்கு கன்னத்தில் இருந்த காயம் ஒன்றில் ஈ ஒன்று இறங்கி இரண்டாம் நிலை தொற்றையே ஏற்படுத்திய அவலமும் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version