Site icon Tamil News

சிங்கப்பூரில் கடன் கொடுத்து சிக்கிய 174 பேர் – விசாரணைகள் தீவிரம்

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக கடன் கொடுத்த சந்தேகத்தின் பேரில் 174 நபர்களிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் பொலிஸார் இதற்கான குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அவ்வாறு சிக்கியவர்கள் 15 வயது முதல் 71 வயதுக்கு உட்பட்டவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுதும் கடந்த ஜூலை 23ஆம் திகதி தொடங்கிய அதிரடி சோதனை தொடர்ந்து 5 நாட்கள் நடந்தது.

அதில் 15 பேர் பேர் இணைய விளம்பரத்தை பார்த்து, அதிக பணத்தை சம்பாதிக்கலாம் என்ற ஆசையுடன் ஏமாந்து சேர்ந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

அதாவது கடனாளிகள் வீடுகளுக்கு மிரட்டல் விடுவதே இவர்களின் வேலை என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கடன் தொழிலுக்கு உறுதுணையாக 66 பேர் செயல்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. மேலும் 93 பேர் வங்கிக் கணக்குளை கொடுத்து உதவியதாக சொல்லப்படுகிறது. விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Exit mobile version