Site icon Tamil News

முன்னால் காதலியை அவமானப்படுத்த காதலன் செய்த செயல்; நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

அமெரிக்கப் பெண்ணொருவரின் அந்தரங்கப் படங்களை அவரின் முன்னாள் காதலன் இணையத்தில் வெளியிட்டதால் பாதிக்கப்பப்பட்ட பெண்ணுக்கு 1.2 பில்லியன் டொலர் இழப்பீடு வழங்க வேண்டும் என அமெரிக்க நீதிமன்றமொன்று உத்தரவிட்டுள்ளது.

தனது முன்னாள் காதலனுக்கு எதிராக பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டு சுமத்தி, 2022 ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட பெண் வழக்குத் தொடுத்திருந்தார்.

தம் இருவருக்கும் இடையிலான காதல் உறவு முறிந்தபின் தன்னை அவமானப்படுத்துவதற்காக தனது அந்தரங்கப் புகைப்படங்களை தனது முன்னாள் காதலன் இணையத்தில் வெளியிட்டார் என அப்பெண் குற்றம் சுமத்தினார்.

வழக்கை விசாரித்த டெக்ஸாஸ் நீதிமன்றம் இப்பெண்ணுக்கு 120 கோடி அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பானது படங்கள் அடிப்படையிலான பாலியல் துஷ்பிரயோகங்களினால் பாதிக்கப்பட்வர்களுக்கு ஒர வெற்றியாகும் என அப்பெண்ணின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version