Tamil News

அமெரிக்காவின் தேசிய மொழிபெயர்ப்பு விருது… தமிழக எழுத்தாளரின் கதை தேர்வு!

அமெரிக்காவின் தேசிய மொழிபெயர்ப்பு விருதுக்கான பட்டியலில் தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் ஜெயமோகனின் ’உண்மை கதைகள்’ இடம் பெற்றுள்ளது.

மொழிபெயர்ப்பு எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அமெரிக்காவில் தேசிய மொழிபெயர்ப்புக்கான விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்த தேசிய விருதுக்கு வெவ்வேறு நாடுகளை சேர்ந்த மொழிபெயர்ப்பு எழுத்தாளர்களின் கதை, கவிதைகள் அனுப்பி வைக்கப்பட்டன.

இதில் இருந்து கதை மற்றும் கவிதை மொழிபெயர்ப்பு பிரிவுகளில் தனித்தனியே 6 பேர் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான லிஸ்ட்டை அமெரிக்க இலக்கிய மொழிபெயர்ப்பாளர் சங்கம் நேற்று அறிவித்தது. ஒவ்வொரு பிரிவுகளில் வெற்றி பெறும் மொழிபெயர்ப்பு எழுத்தாளர்களுக்கு 4 ஆயிரம் அமெரிக்கடொலர் பரிசாக வழங்கப்பட உள்ளது.

நேற்றைய தினம் வெளியான இறுதிப் போட்டியாளர்கள் பட்டியலில் தமிழ், மலையாள மொழிகளிலிருந்து மாற்றப்பட்ட மொழிபெயர்ப்புகள் இடம்பெற்றுள்ளன. அதாவது தமிழில் பி.ஜெயமோகன் எழுதிய ‛உண்மையின் கதைகள்’ என்பதை மொழிபெயர்த்த பிரியம்வாதா ராம்குமார் மற்றும் ஷீலா டோமியின் வலி-யை மலையாளத்தில் இருந்து மொழிபெயர்த்த ஜெயஸ்ரீ காலம் ஆகியோர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களுடன் வியட்நாம் மொழியில் இருந்து தான்ஸ் நாவலான ‛சின்னடவுன்’ என்பதை மொழிபெயர்த்ததற்காக என்குன் அன் லை, மிகோல்ஜ் கன்பெர்க்கின் ‛ஐ வூட் லைக் டூ சே சாரி, பட் தியர் நோ ஒன் டூ சே சாரி டூ’ நாவலை போலிஸ் மொழியில் இருந்து மொழிபெயர்த்த சீன் கஷ்பர் பை, மோனிக்யூ இல்பவ்டூவின் ‛சோ டிஸ்டென்ட் ப்ரம் மை லைப்’ எனும் நாவலை பிரெஞ்சு மொழியில் இருந்து மொழிபெயர்த்த யாரி காமரா ஆகியோரும் இறுதிப்போட்டியில் உள்ளனர்.

இப்படி கதை மற்றும் கவிதை மொழிபெயர்ப்புக்கு தனித்தனியே தேர்வு செய்யப்பட்டுள்ள மொழிபெயர்களில் வெற்றி பெற்றவர் யார்? என்பது நவம்பர் 11ம் திகதி அறிவிக்கப்பட உள்ளது.

Exit mobile version