Site icon Tamil News

ஜோர்தானில் நிர்கதிக்கு உள்ளாகியுள்ளவர்களை மீட்கும் திறன் இலங்கைக்கு இல்லை என குற்றச்சாட்டு!

ஜோர்தான் நாட்டில் தொழிற்சாலை ஒன்று மூடப்பட்ட நிலையில், அங்கு பணியாற்றிய பெரும்பாலானவர்கள், அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில், நிர்கதிக்கு உள்ளாகியுள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது.

இந்நிலையில், இந்திய மற்றும் பங்களாதேஷ் தொழிலாளர்களுடன் இணைந்து இந்த இலங்கைத் தொழிலாளர்கள் ஜோர்தானின் தொழிற்துறையிடம் முறைப்பாடு செய்துள்ளனர். அதேவேளை இலங்கையர்களைத் தவிர ஏனைய நாட்டவர் தமது தூதரகங்கள் மூலம் தங்குமிட ஏற்பாடுகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.

இருப்பினும் இலங்கையரகளால் எவ்வித உதவியை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்று தகவல்கள் கசிந்துள்ளன.

’’அனைத்து தொழிலாளர்களும் அவதிப்படுகின்றனர், எனினும் தமது நாட்டைச் சேர்ந்த பணியாளர்களை மீட்டு அவர்களுக்கான ஏற்பாடுகளைச் செய்யும் இயலுமை ஜோர்தானிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு இல்லை என நாங்கள் நம்புகிறோம்” என அங்குள்ள மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

Exit mobile version