Site icon Tamil News

சென்னையில் இருந்து அயோத்திக்கு விமான சேவை!

சென்னையில் இருந்து அயோத்திக்கு விமான சேவை தொடங்கப்பட உள்ளதாக சென்னை விமான நிலைய நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

அடுத்த வாரம் முதல் இந்த விமான சேவை ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் எதிர்வரும் 22-ம் திகதி கோலாகலமாக நடைபெற உள்ளது.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் சென்னையில் இருந்து அடுத்த வாரம் முதல் அயோத்திக்கு விமான சேவை தொடங்க இருப்பதாக சென்னை விமான நிலைய நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த விமான சேவையை ராமர் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version