Site icon Tamil News

காஸா மோதலால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவ வேண்டும்

காஸா பகுதியில் இடம்பெற்று வரும் யுத்த மோதல்களினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜமைக்கா தொழில்நுட்ப பல்கலைக்கழக சட்ட பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு எகிப்து ஊடாக மனிதாபிமான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை உடனடியாக கூடி குறைந்தபட்ச தேவைகளை வழங்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யுத்த மோதல்களினால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் மனிதாபிமான உதவிகள் நிறுத்தப்படுவதற்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு உட்பட்ட நாடுகள் தலையிடாததும் ஒரு பிரச்சினையாகும்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் கற்கைகள் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அஜித் பாலசூரிய, யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு குறைந்தபட்ச வசதிகளை வழங்குவதற்கு உரிய தரப்பினர் தலையிடாமைக்கான காரணங்கள் குறித்தும் கருத்து வெளியிட்டார்.

Exit mobile version