Site icon Tamil News

அமல அன்னை ஆலயத்தில் அதிமுக அன்னதானம்

சென்னை அடுத்த குரோம்பேட்டை பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற 100ஆண்டு பழமையான அமல அன்னை ஆலயத்தின் 63 ஆம் ஆண்டு விழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் இறுதி நிகழ்ச்சியான திருத்தேர் திருவிழா பங்குத்தந்தை பாக்கிய ரெஜிஸ் ஏற்பாட்டில் இன்று வெகு விமர்சியாக நடைபெற்றது.

நேற்று இரவு 7.30 மணி அளவில் ஆலயத்தில் இருந்து தொடங்கிய திருத்தேர் அமல அன்னை ஆலயத்தை சுற்றி உள்ள பகுதியில் 5கிலோ மீட்டர் தூரம் தேரில் பவனி வந்த அன்னையை பக்தர்கள் வழிபட்டனர்.

பின்னர் இரவு 11 மணி அளவில் ஆலயத்திற்கு வந்த திருத்தேர் நிற்க்கவைக்கப்பட்டு கடைசி பூஜை செய்து ஆலய கொடியை இறக்கி தேர் திருவிழா முடிவு பெற்றது.

இதில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொண்டு அமல அன்னையை வழிபட்டனர்.

இந்நிகழ்ச்சியில் அமல அன்னை ஆலயத்தில் பத்தாயிரம் பக்த கோடி மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அன்னதானம் வழங்குவதற்காக செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் ரூபாய் 6 லட்சம் நன்கொடையாக
வழங்கப்பட்டது.

இதில் குரோம்பேட்டை பகுதி கழகச் செயலாளர் வழக்கறிஞர் எம்.கே.சதீஷ்,

மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் டாக்டர்.மோசஸ் ஜோஸ்வா உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

Exit mobile version