Site icon Tamil News

கடிதம் எழுதி வைத்துவிட்டு யுவதி எடுத்த விபரீத முடிவெடுத்த

இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராகலை டெல்மார் மேற்ப்பிரிவு குளத்தில் இருந்து டெல்மாக் தோட்டம் உடப்புசல்லாவையைச் சேர்ந்த 18 வயதான சுதர்ஷிகா என்ற பெண்ணின் சடலம் இன்று புதன்கிழமை (03) பிற்ப்பகல் இராகலை பொலிஸாரால் மீட்க்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை எனத் தேடப்பட்டு வந்த குறித்த யுவதியே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

இந்த சடலம் நுவரெலியா மாவட்ட நீதவான் முன்னிலையில் இராகலை பொலிஸார் மற்றும் நுவரெலியா குற்றத் தடயவியல் பொலிஸார் இணைந்து மீட்டுள்ளனர்

குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இந்த யுவதி 16 வயதில் (2 வருடங்களுக்கு முன்) தான் விரும்பிய நானுஓயா பகுதியை சேர்ந்த நபருடன் வீட்டை விட்டு புறப்பட்டு சில காலம் தனியாக இருந்துள்ளனர்.

பின்னர் குறித்த ஆணுடனும் குடும்ப அங்கத்தவர்ளுடனும் ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்களினால் இறப்பதற்கு முன் தன் பெற்றோருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார்.

எனக்கு பிரச்சினைகளை சமாளித்துக் கொள்ள முடியவில்லை , மன அழுத்தம் மாத்திரம் காரணம் என்றும் தனது முடிவுக்கு தானே பொறுப்பு என்றும். “அம்மா, அப்பா, என்னை மன்னித்து விடுங்கள்.

இந்த வாழ்க்கை மிகவும் கடினமாக உள்ளது. நான் இங்கிருந்து செல்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார் அத்துடன் யாரையும் தண்டிக்க வேண்டாம் என்றும் எழுதி வைத்துள்ளார்.

குறித்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இராகலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Exit mobile version