Tamil News

3 ஆண்டுகளுக்கு பின் ஸ்வீடன் கடற்கரைக்கு வந்த ரஷ்ய உளவு திமிங்கலம்!

மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் ஸ்வீடன் கடற்கரையின் மேற்பரப்புக்கு ரஷ்ய ‘உளவு’ திமிங்கலம் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த 2019ஆம் ஆண்டில் நோர்வே கடற்கரையில் காணப்பட்டு தலைப்புச் செய்திகளில் வந்த திமிங்கலம், இப்போது 3 ஆண்டுகளுக்கும் பின்னர் ஸ்வீடன் கடற்கரையில் சுற்றித்திரிவதாக அச்சம் எழுந்துள்ளது.

ரஷ்ய கடற்படையால் பயிற்சி பெற்ற உளவாளி என்று சந்தேகிக்கப்படும் பெலுகா திமிங்கலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) ஸ்வீடன் கடற்கரையில் தோன்றியதாக கூறப்படுகிறது.திமிங்கலம் சுற்றித் திரிவதைக் கண்ட கடல் உயிரியலாளர்கள் இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார்கள்.இந்த நிலையில் ஸ்வீடனின் தென்மேற்கு கடற்கரையில் உள்ள ஹன்னெபோஸ்ட்ராண்டில் அந்தத் திமிங்கலம் சுற்றித் திரிவதைக் கடல் உயிரியலாளர்கள் கண்டுள்ளனர். அனால் அது வேகமாக சென்றுவிட்டதாக கூறியுள்ளனர்.

மூன்று ஆண்டுகள் பின் கடற்கரைக்கு வந்த ரஷ்ய உளவு திமிங்கலம்! பரபரப்பு | Russian Spy Whale Came Beach After Three Years

அது ஏன் இப்போது அவ்வளவு வேகமாகச் சென்றார் என்று எங்களுக்குத் தெரியவில்லை என்றும், அது ஹார்மோன் மாற்றத்தல் ஒரு துணையை தேடிக்கொண்டிருக்கலாம் அல்லது தனிமையாக இருக்கலாம்.ஏனெனில் பெலுகாக்கள் சமூகமாக வாழும் இனம் – அது மற்ற பெலுகா திமிங்கலங்களைத் தேடிக்கொண்டிருக்கலாம்”என OneWhale அமைப்பின் கடல் உயிரியலாளர் செபாஸ்டியன் ஸ்ட்ராண்ட் கூறினார்.

குறிப்பாக 13-14 வயதுடையதாக நம்பப்படும் இந்தத் திமிங்கலம், அதிகபட்ச ஹார்மோன் சுரக்கும் வயதில் உள்ளது என கூறுகின்றனர்.ஆனால், இந்தத் திமிங்கலம் நோர்வேக்கு வந்ததிலிருந்து வேறு ஒரு பெலுகாவைப் பார்க்கவில்லை என கூறப்படுகிறது.”ஹ்வால்டிமிர்” என்ற புனைப்பெயர் கொடுக்கப்பட்ட இந்த திமிங்கலம், முதலில் கண்டுபிடிக்கப்பட்டபோது, ​​அதில் ஆக்ஷன் கமெரா பொறுத்தக்கூடிய மவுண்ட் உள்ள சேணம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மவுண்ட்டின் பிளாஸ்டிக் கிளாஸ்ப்களில் Equipment St Petersburg என்ற வார்த்தைகள் அச்சிடப்பட்டிருந்ததால், இந்த திமிங்கலம் ஒரு ரஷ்ய உளவாளி என சந்தேகிக்கப்படுகிறது.ஆனால், திமிங்கலத்தை ரஷ்ய உளவாளியாக பயன்படுத்துவதாக மாஸ்கோ ஒருபோதும் உறுதிப்படுத்தவில்லை. அதேநேரம், வெளிவரும் செய்திகளுக்கு எந்த அதிகாரப்பூர்வ எதிர்வினையையும் வெளியிடவில்லை.

பெலுகா திமிங்கலங்கள் 40 முதல் 60 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை, சுமார் 6m அளவை எட்டும். அவை பொதுவாக கிரீன்லாந்து, வடக்கு நோர்வே மற்றும் ரஷ்யாவைச் சுற்றியுள்ள பனிக்கட்டி நீரில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version