Tamil News

தளபதி 68 இல் இத்தனை பிரபலங்கள் இருக்காங்களா? எதிர்பாராத மாற்றம்…

நடிகர் விஜய் நடிப்பில் லியோ படம் அக்டோபர் 19ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. லியோ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

லியோ படத்தின் ரிலீசை தொடர்ந்து தளபதி 68 படத்தின் பூஜை போடப்பட்டு சூட்டிங் துவங்கவுள்ளதாக படக்குழு சார்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் கமிட்டாகியுள்ளார் விஜய். இந்தப் படத்தின் சூட்டிங் லியோ படத்தின் ரிலீசுக்கு பின்பு பூஜையுடன் துவங்கவுள்ளது.

இதற்கான முன் தயாரிப்புப் பணிகளில் வெங்கட் பிரபு ஈடுபட்டிருந்த நிலையில் தற்போது படத்தின் நடிகர், நடிகைகளை தேர்ந்தெடுக்கும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ள நிலையில், ஜோதிகா மற்றும் பிரியங்கா மோகன் என அவருக்கு இரண்டு நாயகிகள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் பிரபுதேவா, ஜெய் உள்ளிட்டவர்களும் கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தற்போது இந்தப் படத்தில் ஜெய்க்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக விஜய்யின் பீஸ்ட் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார் அபர்ணா தாஸ். அந்தப் படத்தின் சூட்டிங்கின்போது விஜய்யுடன் இணைந்து பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவர் ஈடுபட்ட புகைப்படங்கள் வெளியாகி ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version