Tamil News

கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் விஷால்! வைரல் புகைப்படங்கள்.

நடிகர் விஷால் தனது மகனைப் போல் கருதி வளர்த்து வரும் செல்ல நாயின் 14 வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஷால் தனது வீட்டில் செல்லப்பிராணியாக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த நாய் ஆஜானுபாகுவாக இருக்கும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த நாய் விஷாலிடம் வந்து 14 ஆண்டுகள் ஆனதை அடுத்து கேக் வெட்டி குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார்.

இது குறித்த புகைப்படத்தையும் அவர் தனது ட்விட்டரில் பதிவு செய்து, ‘ஹேப்பி பர்த்டே மை சன்’ என்று கேப்ஷனாகவும் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் நடிகர் விஷால் நடித்து முடித்துள்ள ’மார்க் ஆண்டனி’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அவர் ’துப்பறிவாளன் 2’ மற்றும் ’விஷால் 34’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version