Site icon Tamil News

ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு

பணமோசடியை தடுப்பது மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை எதிர்த்துப் போராடுவது தொடர்பான இலங்கையின் அடுத்த அணுகுமுறை விரைவில் தொடங்கப்படும் என
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாட்டில் வர்த்தகம் செய்வதற்கான இலகுவான தரப்படுத்தல் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு இது நேரடி பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இந்த முடிவு மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அவ்வாறு செய்யத் தவறினால், மூலோபாய குறைபாடுகள் உள்ள நாடாக இலங்கை பட்டியலிடப்படும் அபாயம் உள்ளதாகவும், அது நாட்டின் அபிவிருத்திக்கு பாதகமான பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Exit mobile version