Site icon Tamil News

ஸ்காபரோவில் இடம்பெற்ற கோர விபத்து! சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி

கனடா – ஸ்காபரோவில் ட்ரக் மோதியதில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் மற்றும் பெண் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12:27 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஸ்டீல்ஸ் அவென்யூ ஈஸ்ட் மற்றும் சில்வர் ஸ்டார் பவுல்வர்டு பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் அருகில் உள்ள பகுதியில் சாலை மூடல்கள் இருப்பதாக பொலிசார் கூறுகின்றனர்.

விபத்திற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. மேலதிக விவரங்கள் எதுவும் உடனடியாக கிடைக்கவில்லை.

சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெத்துள்ளனர்.

Exit mobile version