Site icon Tamil News

ஆவணி மாத சோமவார வளர்பிறை பிரதோஷ சிறப்பு அபிஷேக ஆராதனை!

ஆவணி மாத சோமவார வளர்பிறை பிரதோஷ தினத்தையொட்டி உலகப் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் திருக்கோவில் 1000 கால் மண்டபம் அருகே உள்ள பெரிய நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மேற்கொள்ளப்பட்டது.

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைக்க முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்க கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் 1000 கால் மண்டபம் அருகே உள்ள பெரிய நந்தியம் பெருமானுக்கு ஆவணி மாத சோமவார வளர்பிறை பிரதோஷ தினத்தையொட்டி, இன்று அரிசி மாவு, மஞ்சள், தூள் அபிஷேகத் தூள், பஞ்சாமிர்தம், தயிர், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி மற்றும் ஆயிரம் லிட்டர் பால் ஆகியவற்றைக் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

தொடர்ந்து நந்தியம் பெருமானுக்கு அருகம்புல், வில்வ இலை, சாமந்திப்பூ, மல்லி, கனகாம்பரம் ஆகிய பூக்களால் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சங்கொலி முழங்க பஞ்சமுக தீபாராதனையும் நடைபெற்றது.

பிரதோஷ தினத்தின் பொழுது நந்திவர்மனை வழிபட்டால் நினைத்த அனைத்து காரியங்களும் நிறைவேறும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும் குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.

ஆவணி மாத சோமவார வளர்பிறை பிரதோஷ தினமான இன்று அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் நந்தி பகவானை வழிபட்டனர்.

Exit mobile version