Tamil News

தேரேறி வருகின்றாள் அச்சுவேலி பத்தமேனி ஸ்ரீ வடபத்திர காளியம்மாள்….

அச்சுவேலி என்பது இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் கிழக்கு பகுதியில் உள்ள கிராமமாகும்.

இக்கிராமத்தின் வடக்கே தொண்டைமானாறும், தெற்கே ஆவரங்காலும், மேற்கே ஓட்டகப்புலம், வசாவிளானும், கிழக்கே வல்லை கடலின் தொடர்ச்சியுடன் கூடிய பரந்த வயல் வெளியும் பற்றைக் காடுகளும் காணப்படுகின்றன.

இங்கு வசிப்பவர்கள் பெருமளவு விவசாயப் பின்னணியை கொண்டவர்களாகவே காணப்படுகின்றனர்.

இந்து, கிறித்தவ மதங்களை பின்பற்றி வருகின்றனர். பல இந்து ஆலயங்கள் காணப்படுவதுடன் அதில் அச்சுவேலி பத்தமேனி ஸ்ரீ வடபத்திர காளியம்மாள் ஆலயம் மிகவும் பிரத்திபெற்றது.

இந்த ஆலயத்தின் தேர் திருவிழா இன்று இடம்பெற்றது.

இதன்போது பெருமளவான மக்கள் கலந்துகொண்டதுடன், தேர் இழுத்தும் தமது பக்தியை வெளிப்படுத்தினர்.

இதேவேளை, சில பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து தமது நேர்த்திக்கடன்களை செலுத்துவதையும் காணக்கூடியதாக இருந்தது.

 

Exit mobile version