Site icon Tamil News

லிந்துலையில் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான வேன்!

ஹட்டனில் இருந்து லிந்துலை நோக்கி அதிவேகமாக பயணித்த வேன் ஒன்று வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது.

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் லிந்துல வால்ட்ரம்வத்தைக்கு அருகில் நேற்று (25.08) மாலை 05 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் வேனின் சாரதியும் மற்றுமொருவரும் படுகாயமடைந்த நிலையில் லிந்துலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஹட்டன், திக் ஓயா நகரில் உள்ள கேரேஜ் ஒன்றில் வேன் பழுது நீக்கப்பட்டு மீண்டும் லிந்துலை நோக்கி செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே விபத்துக்குக் காரணம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version