Site icon Tamil News

தங்காலை பகுதியில் துப்பாக்கி சூடு : ஒருவர் பலி!

தங்காலை குடுவெல்ல தீரானந்த மாவத்தையில் நேற்று (15.08)  7 மணியளவில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

நிமேஷ் ரங்கா என்ற 34 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் குடுவெல்ல மீனவரின் படகு ஒன்றை ஓட்டிச் சென்றவர் எனவும் அவர் மீது குற்றவியல் குற்றச்சாட்டுக்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆனால், அவர் படகு ஓட்டுபவர் என்பதால், போதைப் பொருள்களை கடல் வழியாக நிலத்துக்கு கொண்டு வருமாறு சிலர் கூறியதாகவும், அதற்கு மறுத்ததால் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்  சஜீவ மெதவத்த தலைமையில் இக்கொலை தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version