Site icon Tamil News

இலங்கை பெற்றோர்களிடம் விடுக்கப்பட்ட விசேட கோரிக்கை

இலங்கையில் காய்ச்சல், இருமல் மற்றும் சளி இருந்தால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பாடசாலைகள் முன்பள்ளி அல்லது பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை இது தொடர்பில் பெற்றோரிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த நாட்களில் தீவின் பல்வேறு பகுதிகளில் பதிவாகும் சளி மற்றும் காய்ச்சலுடன் கூடிய சுவாச நோய் கோவிட்-19 மற்றும் இன்புளுவன்சா உள்ளிட்ட பல வைரஸ்களின் கலவையாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அறிகுறிகள் இருந்தால் பாடசாலைக்கு மாணவர்களை அனுப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் அலர்ஜி, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் நிறுவனத்தின் பணிப்பாளர், பேராசிரியர் சந்திம ஜீவந்தர இதனை தெரிவித்துள்ளார்.

Exit mobile version