Site icon Tamil News

இலங்கை சமூர்த்தி பயனாளிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு!

சமுர்த்தி மானியங்களை இழந்த பயனாளிகளுக்கு மேன்முறையீடுகளை சமர்ப்பிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேற்படி கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், நலன்புரிப் பணத்தை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடுவதற்கான நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் என குறிப்பிட்டார்.

புதிய நலத்திட்ட உதவித் திட்டம் ஜூலை 01 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர்,  பயனாளிகளை என்றென்றும் ஏழைகளாக வைத்திருக்காமல் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் திட்டத்தை தயாரிக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு சமுர்த்தி மானியம் போதுமானதாக இல்லை என்றும், அது வறுமையை போக்க உதவவில்லை என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Exit mobile version