Site icon Tamil News

கனடாவில் இருந்து யாழ் வந்தவர் திடீரென கீழே விழுந்து உயிரிழப்பு!

யாழ் தெல்லிப்பழை மகாஜன கல்லுரி ஒன்று கூடலில் மேடையில் நடனமாடிககொண்டிருந்த நபரே சனிக்கிழமை (26) திடீரென கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.மல்லாகம் பகுதியைச் சேர்ந்த நாகராஜா சசிதரன் (61) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே ஆவார்.

தெல்லிப்பழையில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில், மஹாஜனா கல்லூரியில் கல்வி கற்ற பழைய மாணவர்களது ஒன்றுகூடல் நடைபெற்றது. இதன்போது கனடாவில் இருந்து வருகை தந்த குறித்த நபர் பாடல் ஒன்றுக்கு நடனமாடிக்கொண்டு இருந்தவேளை திடீரென கீழே விழுந்தார்.

அவரை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்மாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டது . திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம்மரண விசாரணைகளைமேற்கொண்டு சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது

Exit mobile version