Site icon Tamil News

ஹோர்டன் சமவெளி பகுதிக்கான புதிய பாதை திறக்கப்படவுள்ளது

வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் நாளை (28) முதல் டயகம ஊடாக ஹோர்டன் சமவெளி பகுதிக்கான புதிய பாதையை திறந்து வைக்கவுள்ளது.

வனஜீவராசிகள் மற்றும் வனவள அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார ஆகியோரின் தலைமையில் புதிய வீதி திறந்து வைக்கப்படவுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் இந்த வீதியை பிரதானமாக நடைபயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுவதற்கு பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

எக்காரணம் கொண்டும் மற்ற வாகனங்கள் அணுகு பாதைக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய அணுகு வீதியினால் டயகம பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகள் எதிர்நோக்கும் ஆபத்துக்கள் நீங்குவதுடன் ஹோர்டன் சமவெளி தேசிய பூங்காவின் பாதுகாப்பும் மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, தேசிய பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் செல்ல இது மூன்றாவது வழியாகும்.

Exit mobile version