Site icon Tamil News

ஜேர்மனியில் அதிரடியாக அமலுக்கு வரும் புதிய நடைமுறை : பணம் அனுப்புவதில் சிக்கல்!

ஜேர்மனியில் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு மாத்திரம் சிறப்பு கட்டண  அட்டை விநியோகம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜேர்மனி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்ட விதியின்படி புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கள் உள்ளுரில் இருக்கும் மளிகை கடையில் பணத்திற்கு பதிலாக அட்டையை பயன்படுத்தி பொருட்களை கொள்வனவு செய்ய முடியும்.

குறித்த அட்டை மூலம் குறைந்த அளவிலான பணத்தை மட்டுமே எடுக்க முடியும் என்பதுடன், ஜேர்மனிக்கு வெளியில் பணத்தை அனுப்ப முடியாது.

அதாவது ஜேர்மனியில் புலம்பெயர்பவர்கள் அங்கிருந்து வெளிநாட்டிற்கோ, உறவினர்களுக்கோ பணம் அனுப்புவதை தடுப்பதுதான் அதன் முக்கிய நோக்கம். இதன்படி புலம் பெயர்ந்தோருக்கு வழங்கப்படும் பணத்தில் 50 சதவீதம் பணமாகவும், 50 சதவீதம் அட்டை மூலமும் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் புலம்பெயர்ந்த வக்கீல் குழுக்கள் புதிய ஒழுங்குமுறை பாரபட்சமானது என்று விமர்சித்துள்ளனர்.

பணம் செலுத்தும் அட்டைகள் புலம்பெயர்ந்தோரை தனிமைப்படுத்துவதாகவும்,  அவர்கள் மேலும் ஒதுக்கிவைக்கப்படுவதாகவும் கூறுகின்றனர்.

ஜேர்மனி பல மாதங்களாக இடம்பெயர்வதைக் கட்டுப்படுத்த முயற்சித்து வருகிறது. கடந்த ஆண்டு ஜேர்மனியில் புகலிடம் கோரி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 350,000க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 50% அதிகமாகும்.

Exit mobile version