Site icon Tamil News

கேட் மிடில்டனின் புகைப்படத்தை திரும்பப்பெற்ற செய்தி நிறுவனங்கள்!

கென்சிங்டன் அரண்மனை வெளியிட்ட புகைப்படத்தில் கேட் மிடில்டனின் புகைப்படத்தை பல முக்கிய செய்தி நிறுவனங்கள் திரும்பப் பெற்றுள்ளன.

ஜனவரி மாதம் கேட் மிடில்டன்  வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை ஒன்றை மேற்கொண்டிருந்தார். இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் புகைப்படத்தை வெளியிட்டு மகளிர் தின வாழ்த்துச் செய்தியையும் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் கேட் மிடில்டன் மற்றும் அவரது குழந்தைகளைக் காட்டும் கென்சிங்டன் அரண்மனையால் வெளியிடப்பட்ட இந்த புகைப்படத்தை  பல முக்கிய செய்தி நிறுவனங்கள் திரும்பப் பெற்றதால் சமூக ஊடக பயனர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

Exit mobile version