Site icon Tamil News

ஏழை மக்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய உயர்நீதிமன்ற வழக்கறிஞர்

சென்னை அடுத்த பட்டாபிராமை சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பி.கே.இளங்கோவன் என்பவர் தனது பிறந்த நாளை ஏழை,எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கொண்டாடியுள்ளார்.

பட்டாபிராமில் ஏழை எளிய மக்கள் அவசர சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் இலவசமாக செல்ல நவீன வசதிகள் கொண்ட 2 ஆம்புலன்ஸ் வாகனங்களை வழங்கியுள்ளார்.

இந்த 2 ஆம்புலன்ஸ்களும் இரண்டு ஓட்டுனர்கள் மற்றும் செவிலியர்களை நியமித்து 24 மணி நேரமும் இயக்கப்படவுள்ளது.

இதனை புரட்சி பாரதம் கட்சி தலைவரும் எம்.எல்.ஏவுமான ஜெகன் மூர்த்தி துவக்கி வைத்தார்.

அதேபோல் துப்புரவு பணியாளர்கள் வயதானவர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு தினந்தோறும் டீ.மோர் போன்றவை இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

மேலும் தன்னிடம் பணிபுரியும் ஜூனியர் வழக்கறிஞர்கள்,ஊழியர்கள் 15 பேருக்கு 1.5 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை வழங்கி உற்சாகப்படுத்தினர்.

மேலும் பட்டாபிராம் பகுதியை சேர்ந்த ஏழை,எளிய மக்கள் 2000 க்கும் மேற்பட்டோருக்கு அரிசி , மளிகை பொருட்கள்,புடவை உள்ளிட்ட நலத்திட்டம் வழங்கினார்.

வந்திருந்தவர்கள் அனைவருக்கும் பிரியாணி வழங்கி உபசரித்தார்.வழக்கறிஞர் ஒருவர் தனது பிறந்த நாளை ஏழை, எளிய மக்கள் பயன்பெரும்ய் வகையில் கொண்டாடி இருப்பது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பிறந்த நாள் விழாவில் கேக் வெட்டுதல் போன்ற கொண்டாட்டங்கள் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version