Site icon Tamil News

போலாந்தில் நரகத்துக்குச் செல்லும் 666 பேருந்துச் சேவை – குவியும் முறைப்பாடுகள்

போலாந்தின் வடக்கே உள்ள ஹெல் (Hel) எனும் நகரம் பிரபலமான உல்லாசத் தலத்திற்கு செல்ல பேருந்துச் சேவை 666 பயன்படுத்தப்படுவதாக தெரியவந்துள்ளது.

ஹெல் என்பது ஆங்கில உச்சரிப்பின்படி ‘நரகம் என்ற பொருளைத் தருகிறது. அந்த இடத்துக்குச் செல்ல ‘666’ எனும் பேருந்துச் சேவை பயன்படுத்தப்படுவது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கிறிஸ்துவர்கள் சிலரைப் பொறுத்தவரை ‘666’ என்பது சாத்தானைக் குறிப்பிடும் எண்களாகும். பேருந்துச் சேவையின் எண்ணுக்கு எதிராக வெகுகாலமாக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

சேவையை வழங்கும் PKS Gdynia பேருந்து நிறுவனம் சாத்தானுக்கு ஆதரவாக இருப்பதாகவும் சமயக் குழுக்கள் குற்றஞ்சாட்டின. பேருந்துச் சேவை எண்ணை 666இலிருந்து 669க்கு மாற்ற முடிவெடுத்துள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது.

எண்ணை மாற்றுவதால் சர்ச்சை குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அடுத்து ஹெல் நகரின் பெயரை மாற்றவேண்டும் என்று இணையவாசிகள் சிலர் கூறியுள்ளனலர்.

Exit mobile version