Site icon Tamil News

600 எரிபொருள் நிரப்பு நிலையங்களை தனியார் மயமாக்க அரசு திட்டம்!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 600 எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு தனியார் நிறுவனத்துக்கு வழங்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சேவை சங்க தலைவர் ஜகத் விஜேகுணவர்தன  தெரிவித்துள்ளார்.

துறைமுகம்,  மின்சாரம் மற்றும் பெற்றோலியம் ஆகிய துறைகளின் தொழிற்சங்க தலைவர்களுடன் இன்று  கொழும்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் குறித்த நடவடிக்கை காரணமாக   6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தொழில்வாய்ப்புக்களை இழப்பார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கூட்டுத்தாபனம் கடந்த ஜனவரி மாதம் 1300 கோடி ரூபாய்,  பெப்ரவரி மாதம் 900 கோடி ரூபாய் இலாபமடைந்துள்ளது. இவ்வாறு

Exit mobile version