Site icon Tamil News

சூடானிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட மேலும் 6 இலங்கையர்கள்! 

சூடானில் இருந்து ஆறு இலங்கையர்கள் நேற்று வெள்ளிக்கிழமை அந்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக சவுதியிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்தக் குழுவினர் வெள்ளிக்கிழமை சவுதி – ஜெட்டாவிலுள்ள கிங் பைசல் கடற்படைத் தளத்தை வந்தடைந்துள்ளனர்.

சவுதி வெளிநாட்டலுவல்கள் அமைச்சு இதற்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்காக இலங்கை நன்றி தெரிவித்துள்ளது.

இதேவேளை சூடானில் சிக்கியுள்ள இலங்கையர்களை வெளியேற்ற ஒத்துழைக்குமாறு இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில்  உதவி தேவைப்படும் எந்தவொரு இலங்கைப் பிரஜையும் சூடான் துறைமுன நகரத்திலுள்ள அல் ரவுதா ஹோட்டலில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள சவுதி அரேபிய தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு சவுதி வெளிவிவகார அமைச்சு இலங்கை தூதரகத்திற்கு தெரிவித்துள்ளது.

Exit mobile version