Site icon Tamil News

ஜெர்மனியில் முக்கிய நகரங்கள் பலவற்றில் வாழ்ந்து வருகின்ற மக்களுக்கு 500 யூரோ நிதி உதவி

ஜெர்மனி நாட்டில் சுற்றுப்புற சூழலை கருத்தில் கொண்டு முக்கிய நகரங்கள் பலவற்றில் வாழ்ந்து வருகின்ற மக்களுக்கு 500 யுரோ நிதி உதவி வழங்கப்பட இருக்கின்றது.

ஜெர்மனியி்ன் சில பெரிய நகரங்கள் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கின்ற நடவடிக்கையில் ஈடுப்படுவதற்காக மக்களுக்கு சில நிதி உதவிகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிய வந்து இருக்கின்றது.

குறிப்பாக பெரிய நகரங்களில் மக்கள் உந்துருளியில் செல்வதற்குரிய வசதியை ஏற்படுத்துவதற்காக இவர்களுக்கு ஆக கூடிய தொகையாக 500 யுரோக்களை வழங்குவதற்கு முன் வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறிப்பாக போகன் நகரமானது இவ்வாறு உந்துருளியில் நகரங்களில் பயணம் மேற்கொள்வதற்காக 70 ஆயிரம் யுரோக்களை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும்,

அதாவது இவ்வகையான உதவி பணத்தை பெறுவதற்கு மக்கள் இணையத்தளத்தின் கூடாக விண்ணப்பம் செய்யலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜெர்மனியின் பெரிய நகரங்களில் தற்பொழுது 8 சதவீதமான மக்களே உந்துருளியில் பயணம் மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதனால் இந்த தொகையை 15 சதவீதமாக அதிகரிப்பதற்காக இவ்வகையான நிதி உதவியை வழங்குவதறகு முன்வந்துள்ளது.

அதாவது ஆக கூடியதாக 500 யுரோக்களை வழங்குவது என்றும் ஒரு உந்துருளியானது 1400 யுரோக்களுக்கு வேண்டப்படுமானால் 500 யுரோக்களை நகர நிர்வாகமானது இந்த வேண்டுகின்ற நபருக்கு வழங்கும் என்றும் தெரியவந்துள்ளது.

Exit mobile version