Site icon Tamil News

3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் சார்ந்த துறைகளில் கடல் போல வாய்ப்புகள்

மாயா அகாடமி ஆஃப் அட்வான்ஸ்டு சினிமாட்டிக்ஸ் எனும் மாக்  (MAAC) கோவையில்  நவீன 3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் குறித்து இளம் தலைமுறை மாணவ,மாணவிகளுக்குபயிற்சி அளித்து வருகிறது.

கோவை உட்பட பல்வேறு முக்கிய   நகரங்களில் கிளை மையங்களைக் கொண்டு செயல்பட்டு வருகின்றது.

இந்நிலையில் மாக் டிஜிட்டல் துறையில் சாதித்த,சாதிக்க விரும்பும் இளம் தலைமுறையினரை ஊக்குவிக்கும் விதமாக நவீன தொழில் நுட்பம் சார்ந்த குறும்படம் இயக்கம்,டிஜிட்டல் ஓவியம்,ஃபோட்டோ கிராபி,ரீல்ஸ் மேக்கிங்,குழு மற்றும் தனி நடனம்,மேக்கப் கலை என பல்வேறு போட்டிகளை நடத்தியது.

இதில் மாக் மையத்தில் பயின்று வரும் மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்ட நிலையில்,சிறந்த படைப்புகளுக்கான விருது வழங்கும் விழா கோவை இந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

மாக் பயிற்சி மையத்தின் தலைமை செயல் அதிகாரி சம்ஜித் தனராஜ் தலைமையில் நடைபெற்ற இதில் இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி, ,கல்லூரி முதல்வர் பொன்னுசாமி ,எஸ்.என்.ஆர்.கல்லூரி முதல்வர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக தன்னம்பிக்கை பேச்சாளர்,எழுத்தாளரும் ஆன  நீயா நானா புகழ்,கோபிநாத் கலந்து கொண்டு சிறந்த படைப்பாளிகளுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், 3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் சார்ந்த துறைகளில் கடல் போல வாய்ப்புகள் இருப்பதாகவும்,இளம் தலைமுறை மாணவ,மாணவிகள் தங்களது வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினால்,இதில் வெற்றியாளராக மாறலாம் என பேசினார்.

நிகழ்ச்சியில்,மாயா அகாடமி விற்பனை ,மண்டல மேலாளர் பிரேம் ராஜா, உட்பட பலர் கலந்து கொண்டனர்…

 

Exit mobile version