Site icon Tamil News

இறந்த காவலர் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க நல்லடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எல்.என்.புரம் பகுதியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன்.

மீமிசல் காவல்நிலையத்தில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வந்த நிலையில்,

நேற்றைய தினம் திருமயம் அருகே உள்ள கல்லூரில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

பணியில் இருந்த பொழுது மாடு முட்டியதில் நவநீதகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

இந்நிலையில் நவநீதகிருஷ்ணனின் குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரண நிதி வழங்கி அவரை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய வேண்டும்,

என கூறி உறவினர்கள் நேற்றைய தினம் அறந்தாங்கி அரசு மருத்துவமனை எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உறவினர்கள் மற்றும் நண்பர்களின் போராட்டத்தினால் தமிழக அரசு பணியில் இறந்த காவலர் நவநீதகிருஷ்ணனுக்கு 20 லட்ச ரூபாய் இழப்பீடாகவும்,

அவருடைய உடலை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.

உத்தரவின் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே தலைமையிலான காவல்துறையினர் சுமார் 100-பேருக்கும் மேற்பட்டோர்,

இறந்த காவலர் நவநீதகிருஷ்ணன் இல்லத்திற்கு வருகை தந்து அவருடைய உடலுக்கு மலர்வலையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து நவநீதகிருஷ்ணனின் உடலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே,காவல் துணை கண்காணிப்பாளர் தினேஷ் குமார்,

காவல் ஆய்வாளர் பிரேம்குமார் உள்ளிட்ட காவலர்கள் சுமந்து தூக்கி சென்றனர்.

மேலும் மயானத்திற்கு கொண்டுவரப்பட்ட நவநீதகிருஷ்ணனின் உடலுக்கு காவல்துறை அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில்,

அரசு மரியாதையுடன் 30குண்டுகள் முழங்க வெடிக்க செய்தும்,

இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தியும் நல்லடக்கம் செய்தனர்.

Exit mobile version