Site icon Tamil News

29 வேட்பாளர்கள் பிணைத் தொகை செலுத்தியுள்ளனர்

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 29 வேட்பாளர்கள் பிணைத் தொகை செலுத்தியுள்ளனர்.

வேட்பாளர்களுக்கான பாதுகாப்பு வைப்புத்தொகை எதிர்வரும் புதன்கிழமை (14) நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.

மேலும் வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் இந்த தேர்தலில் செலவு செய்யும் பணமும் அதிகரிக்கும் என தேர்தல் ஆணையம் கூறுகிறது.

1994 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு பிரதான வேட்பாளர்களைத் தவிர வேறு ஒரு வேட்பாளர் பெற்ற அதிகபட்ச வாக்குகள் 4.08 வீதமாகும்.

2000ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர் நந்தன குணதிலக்க பெற்ற வாக்கு வீதமாகும்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், இரண்டு பிரதான வேட்பாளர்களைத் தவிர, கூடுதலாக உள்ள அனைத்து 33 வேட்பாளர்களும் 2.5% வாக்குகளை மட்டுமே பெற முடியும்

இதன்படி 2% வாக்குகளை கூட பெற முடியாத எஞ்சிய வேட்பாளர்களின் பிணைப் பணம் பறிமுதல் செய்யப்படு என PAFRAL அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி விளக்கமளித்துள்ளார்.

Exit mobile version