Site icon Tamil News

நாட்டின் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு கையிருப்பில் மாற்றம்

இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு சொத்துக்களின் அளவு ஜூலை  மாதத்தில் குறைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய தரவு அறிக்கைகளின்படி இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜூன் 2024 இல் 5,654 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்ட உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் மதிப்பு ஜூலை 2024 இல் 0.1% குறைந்து 5,649 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது.

உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களில் முக்கிய அங்கமாக உள்ள அந்நிய செலாவணி கையிருப்பு, கடந்த ஜூலை மாத இறுதியில் 5,574 மில்லியன் டொலர்களாக பதிவாகியுள்ளது.

இது ஜூன் 2024 இல் பதிவு செய்யப்பட்ட 5,605 மில்லியன் டொலரில் இருந்து 0.6% குறைந்துள்ளது.

இதேவேளை, கடந்த ஜூலை மாதத்தில் இலங்கை மத்திய வங்கியின் தங்க கையிருப்பு 35 மில்லியன் டொலரில் இருந்து 37 மில்லியன் டொலர்களாக 5.2% அதிகரித்துள்ளது.

இந்த உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களில் சீன மக்கள் வங்கியிடமிருந்து 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமமான அந்நியச் செலாவணி வசதியிலிருந்து பெறப்பட்ட ரசீதுகளும் உள்ளடங்கும் என இலங்கை மத்திய வங்கி மேலும் கூறுகிறது.

Exit mobile version