Site icon Tamil News

2400 அடி உயர மலையில் அமைந்துள்ள நந்தீஸ்வரர் ஆலய வரலாறு மறைவு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்திலிருந்து 15கிலோ மீட்டர் தொலைவில் மலை பகுதி மீது வளைந்துநெளிந்து செல்லும் மாலைபாதை பாதையின்  வழியே,

சென்றால் வெலதிகாமணி பெண்டா  என்ற இடத்தில் இருந்து இராண்டு கிலோமீட்டர் தூரத்தில் மாதகடப்பா எனும் மலைக் கிராமத்தை  அடையலாம்  இதுவரைதான் வாகனங்கள் செல்ல முடியும் மலையின் அடிவாரத்தை

இருந்து மலையின் உச்சியில் அமைந்துள்ள ஆலயத்தின் மதில் சுவர்கள்  மூலிகை மரங்கள் மற்றும் பல்வேறு  தாவரங்கள் இயற்கை எழில் சூழ்ந்துள்ள   அழகாய் காட்சியளிக்கிறது  அடிவாரத்தில் இருந்து செல்லும் வழிகள் சிதிலமடைந்து கரடுமுரடான

கற்கள் மற்றும் பாறைகள் நிறைந்த பாதையில்  ஏறிச் செல்ல வேண்டும் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2800 அடி உயரம் உள்ள மலையின் உச்சியை அடைந்தால், மலை ஏறிய களைப்பே இல்லாமல் பக்தி நிறைந்த உணர்வுகள் ஏற்படுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

கோவில் நுழைவாயில் பாறையில் செதுக்கப்பட்ட ஆஞ்சநேயரைவழிப்பட்டு அதன் பின்னர் மலைக் கோயிலுக்கு அடியில் மத்தியில் ஆகாய கங்கை தீர்த்த குளம் உள்ளது,

இத்தீர்த்த குளத்தில் இருந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட வருகிறது மலையின் உச்சியில்  நடுவில் கருங்கற்களால்

அமைந்துள்ள அருள்மிகு நந்தீஸ்வரர் ஆலயம். அதன் அருகில் மிகவும் சிதிலமடைந்து செங்கற்கள் ஆன சிறிய கோபுரம் காணப்படுகிறது  கருவறையில்  சிறிய சிவலிங்க  ரூபத்தில் நந்தீஸ்வரர்

காட்சி அளிக்கிறார் கருவறை பிராகாரத்தை சுற்றி விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் ஆகியோர் காட்சி தருகின்றனர்.

கோவிலைச் சுற்றி பார்த்தாள் மன்னர்கள் ஆட்சி காலத்தில் பெரிய மதில் சுவர்கள் காட்டி கோட்டைகள் போல் அமைத்து எதிரி நாட்டு மன்னர்களின் இருந்து காப்பாற்ற மதில் சுவர்களை காண முடிகிறது கருவறை அருகில் உள்ள செங்கற்களால் ஆன சிதிலமடைந்து இடம்

அம்பிகையின் ஆலயமும் இருந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது மேலும் பாறையில் ஒரு காலடி தடம் பதிந்துள்ளது அதன் அருகில் ஒரு குளம் உள்ளது இந்த இரண்டு குளங்களிலும் கோடைக்காலளில் நீர்

வற்றாமல் நிறைந்து காணப்படுவது இத்தலம் மிகவும் தொன்மையும் பெருமையும் வாய்ந்து திகழ்கின்றது அரசர்கள் ஆட்சி காலத்தில் தங்களுக்கு ஆள்பலம், படைபலம் இருந்தாலும்கூட,

தங்களுடைய நாட்டைப் பாதுகாக்க வேண்டி, தெய்வத்தின் துணை மிகவும் அவசியம் குறித்து உணர்ந்திருப்பதற்குமலையின் உச்சியில் பெரிய கருங்களை கொண்டு கோவில் அமைத்து வழிபாடு நடத்தியதற்கு இன்றும் மறையாமல் சாட்சியாக இருந்தது வருகிறது.

இந்த கோவில்   மலைகளில்  கோட்டைகள் பாதுகாத்து எழுப்பி, இறைவனை வழிபட்டு வந்துள்ளனர் இத்தனை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இக்கோவில் இன்று பராமரிப்பு இன்றி கம்பீரத்தை இழக்காமல் காட்சி தருகிறது.

ஒரு கோட்டை. கோட்டையைப் போலவே கோயிலும் சிதிலம் அடைந்துதான் காட்சி தருகிறது தற்போது ஒரே சில பக்தர்கள் கலந்து கொண்டு பிரதேசம் மற்றும் பெளர்ணமி தினத்தில் சிறப்பு அபிஷேகம் செய்து பூஜைகள் செய்து முதலில் விநாயகரை வழிபட்டு அதன் பின்னர் முருக பெருமானை பூஜித்து சங்குகள் மூலங்க நந்தீஸ்வரருக்கு தீம் ஆராதனை செய்து அரோகரா அரோகரா என பக்தர்கள் கோஷங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன

மேலும் இது குறித்து ஆய்வு மேற்கொண்டு அறநிலையத்துறை சார்பில் கோவிலை புதுப்பித்து தினமும் பூஜைகள் நடைபெற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கையாக உள்ளது .

Exit mobile version