Site icon Tamil News

பிரான்ஸில் 20 மாதக் குழந்தைக்கு நாயால் நேர்ந்த கதி

பிரான்ஸில் 20 மாதக் குழந்தையை ஒரு நாய் கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓங்லே நகரத்தில் விடுமுறைக்காக வந்திருந்த இந்தக் குடும்பம் ஒரு உணவகத்தின் வெளி தெராஸ் பகுதியில் உணவருந்திக் கொண்டிருந்தது.

இதன் போது அங்கு உணவருந்த வந்த ஒருவர் கொண்டுவந்த ரொட்வைலர் (rottweiler) நாய், அவர்களின் 20 மாதக் குழந்தையைத் தாக்கி, தலையில் கவ்வி உள்ளது.

பிரான்சில் ரொட்வைலர் நாயை வெளியே கொண்டு போகும் போது, அதன் வாயில் கவசம் அணிந்தே செல்ல வேண்டும் என்பது சட்டமாகும்.

இந்த நாயைக் கொண்டு வந்தவர், வாய்க்கவசம் அணியாமல் சட்டத்தை மீறி குழந்தையை உயிராபத்திற்குள்ளாகியுள்ளார்.

தலையில் தாக்கப்பட்ட குழந்தை உயிராபத்தான நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, சத்திர சிகிச்சைக்கு உள்ளாகி உள்ளார்.

தலையில் மட்டுமே 60 தையல்கள் போடப்பட்டுள்ளன. உடனடியாக இந்த நாயின் உரிமையாளரான பெண் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version