Site icon Tamil News

ஜெர்மனியில் வெளிநாட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு – சலுகையின் அடிப்படையில் சந்தர்ப்பம்

ஜெர்மனியில் வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நாடாளவிய ரீதியில் பல்வேறு துறைகளுக்கு பயிற்சி பெற்ற பல இலட்சம் தொழிலாளர்கள் தேவை என புதிய புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயிற்றப்பட்ட தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், சலுகை அடிப்படையில் வெளிநாட்டவர்களை அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விசேடமான முறையில் அழைக்கப்படும் வெளிநாட்டு பயிற்றப்பட்ட தொழிலாளர்களுக்கு வரி விலக்களிப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

குறைந்து மூன்று வருடங்களுக்கு வருமான வரி செலுத்த தேவையில்லை என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் தொழிலாளர்களை உள்ளீர்க்க அரசாங்கம் புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது.

எனினும் இவ்வாறான திட்டங்கள் ஜெர்மனியில் வாழும் தொழிலாளர்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஜெர்மன் குடியுரிமை பெற்ற பயிற்றப்பட்ட தொழிலாளர்களுக்கும், வெளிநாட்டு பயிற்றப்பட்ட தொழிலாளர்களுக்கும் ஏற்றத்தாழ்வுகளை காட்ட கூடாது என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பல ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு துறைகளில் வெளிநாட்டு தொழிலாளர்கள் பெரும் பங்கு வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Exit mobile version