Site icon Tamil News

இலங்கையில் சீரற்ற காலநிலையால் 07 பேர் உயிரிழப்பு!

தொடரும் சீரற்ற காநிலை காரணமாக  இதுவரை 07 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

13 மாவட்டங்கள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அந்நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மாத்தறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் இன்று (08.10) காலை மாத்தறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலுக்கு மாத்தறை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதன்போதே மேற்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி  காலி மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழையினால் 3500 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 8,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. 250 பகுதி சேதங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version