Site icon Tamil News

பிரான்ஸில் வேலை தேடுவோரின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

பிரான்ஸில் வேலை தேடுவோரின் எண்ணிக்கை கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இவ்வருடத்தின் முதல் காலாண்டில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

Pôle emploi இல் A பிரிவில் பதிவு செய்துகொண்டு வேலை தேடுவோரின் எண்ணிக்கை சென்ற வருடத்தின் இறுதிக்காலாண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டின் முதல் காலாண்டில் 1.2% சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

தற்போது 3.016 மில்லியன் பேர் இந்த A பிரிவில் உள்ளனர்.

அதேவேளை, B மற்றும் C பிரிவில் பதிவு செய்துகொண்டு வேலை தேடுவோரின் எண்ணிக்கை 0.4% சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போது 5.369 மில்லியன் பேர் இந்த பிரிவுகளில் உள்ளனர்.

Exit mobile version