Site icon Tamil News

வெயிலின் தாக்கத்தை குறைக்க தண்ணீர் பந்தல் பூக்கடை கூலி தொழிலாளிகள் அசத்தல்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்காக பேருந்து நிலையத்தில் உள்ள பூக்கடைகளில் வேலை செய்யும் கூலி தொழிலாளிகள் இணைந்து கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால்,

நாள்தோறும் ஆயிரக்கணக்கான  பயணிகள் வெளியூர் செல்ல பேருந்து நிலையம் வரும் நிலையில் தண்ணீர் இன்றி பலரும் தவித்து வருவதால் பொதுமக்களின் நலன் கருதி தங்கள் கூலியில் இருந்து ஒரு சிறிய தொகையை  சேகரித்து பொதுமக்களின்  தாகத்தை தணிக்க மூன்று மாதத்திற்கு தண்ணீர் பந்தல்  அமைக்க திட்டமிட்டு இன்று செங்கத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகளையும் அழைத்து நீர் மோர்  பந்தல் திறந்து வைத்தனர்.

இதனை  செங்கம் பேரூராட்சி மன்ற தலைவர் சாதிக் பாஷா திமுக நகர செயலாளர் அன்பழகன் மற்றும் மலர் தொடு வியாபாரிகள் சங்கத் தலைவர் செந்தில் இணைந்து ரிப்பன் வெட்டி பேருந்து பயணிகளுக்கு தர்பூசணி மோர் ஜூஸ் வழங்கி துவக்கி வைத்தனர்.

 

Exit mobile version