Site icon Tamil News

வெகு விமர்சையாக நடைபெற்ற தேரோட்டம்

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்தசுவாமி கோயில் மாசி பிரம்மோற்சவ பெருவிழாவின் ஏழாம் நாளான இன்று திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருப்போரூரில் அறுபடை வீட்டிற்கு நிகரான மும்மூர்த்தி அவதாரத்தை பிரதிபலிக்கும் விதத்தில், மூலவர் கந்தசுவாமி சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார், இக்கோவிலில், கந்தசஷ்டி, மாசி பிரம்மோற்சவம், மாணிக்கவாசகர் உற்சவம், வசந்த விழா உள்ளிட்ட சிறப்பு விழாக்கள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டு மாசி பிரம்மோற்சவ பெருவிழா, கடந்த 25 ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது,முக்கிய நிகழ்வான, திருத்தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

கந்தசாமி பெருமான்  வள்ளி தெய்வானையுடன்  காட்சியளித்த திருத்தேரை பக்தர்கள் அரோகரா என பக்தி பரவசத்துடன் தேரை  வடம் பிடித்து இழுத்தனர்,

இந்நிகழ்ச்சியில் உள்ளூர் மட்டுமல்லாது வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

திருத்தேரோட்டத்தை தொடர்ந்து வரும் 8ஆம் தேதி அன்று திருக்கல்யாணம் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version