Site icon Tamil News

வாட்டர் டேங்க் கிடங்கில் தீ விபத்து

தண்டையார்பேட்டை பகுதியில் தென்னக ரயில்வே துறை சார்பாக மின் தொடர் வண்டிகள் சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த பணிகளுக்கு பயன்படுத்தக்கூடிய வாட்டர் டேங்க் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்து விரைந்து வந்த  தண்டையார் பேட்டை மற்றும் இராயபுரம் தீயணைப்பு துறையினர்  தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்னக ரயில்வே கிடங்கில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் அந்தப் பகுதியில் கருப்பு புகைகள் சூழ்ந்து வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது

அருகில் இருக்க கூடிய குப்பைகளை யாரேனூம் கொளுத்தி அதன் மூலமாக தீ மளமள வென டேங்கருக்கு பரவியதா என்ற அடிபபடையின் திருவொற்றியூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தென்னக ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் தீப்பற்றியதால்அப்பகுதியில் வசித்து வரும் குடியிருப்பு வாசீகள் அச்சமடைந்துள்ளனர்

Exit mobile version