Site icon Tamil News

யாழில் குற்ற செயல்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் ஆராய விசேட கூட்டம்!

யாழ். வடமராட்சியில் இருந்து  தொழிலுக்கு செல்லும் அனைத்து படகுகளும் கடற்படையினரின் சோதனை சாவடியினை தாண்டியே செல்ல வேண்டும் அவ்வாறு செல்வதன் மூலம் சட்டவிரோத தொழில்களில் ஈடுபடுவோர் கைது செய்யக்கூடியதான சாத்தியக்கூறு காணப்படுவதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் குற்ற செயல்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் ஒன்று நேற்று மாலை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

குறித்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்குப் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்தோடு தீவுப் பகுதியில் இடம்பெறும் திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த மண்டைதீவில் உள்ள சோதனை சாவடியை பலப்படுத்தி தீவு பகுதியில் இருந்து வெளியேறும் வாகனங்களை பரிசோதனை செய்வதன் மூலம் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த முடியும் எனவும் இன்றைய கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய கூட்டத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், வடக்கு மாகாண கடற்படை தளபதி, பொலிஸ் உயரதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், பொலிஸ் நிலையங்களின் பொறுப்ப திகாரிகள், ராணுவத்தினர் முப்படைகளின் பிரதிநிதிகள்,  துறை சார் திணைக்களங்களின்  தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version