Site icon Tamil News

மாமல்லபுரம் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  70 வது பிறந்த நாளை முன்னிட்டு மாமல்லபுரம் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின்  70 ஆவது பிறந்தநாளை தொடர்ந்து மாமல்லபுரம் நகர திமுக சார்பில் நகர செயலாளர் விஸ்வநாதன் ஏற்பாட்டில் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் 570 பேருக்கு தையல் இயந்திரம், மாணவர்களுக்கு கேரம் போர்டு ஆண்களுக்கு வேட்டி பெண்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version