Site icon Tamil News

மழை என்றும் பொருட்படுத்தாமல் மன உறுதியுடன் உண்ணாவிரதம்

திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தில் நேற்று (17/03/2023) பூவிருந்தவல்லி அடுத்த குமணன்சாவடியில் நடந்த மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில்

மழை என்றும் பொருள்படுத்தாமல் மன உறுதியுடன் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு

1. குடும்ப நலநிதி மூன்று லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்த வேண்டியும்,

2.  மருத்துவ அட்டை வழங்க வேண்டியும்,

3.  பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியும்,

4.  வாரிசு வேலை வழங்க வேண்டியும்,

5. விற்பனையாகாத சரக்குகளை தேவைக்கு அதிகமாக கடைகளில் குவிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.

போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற உண்ணாவிரதத்தில்

சி பி ஐ மாநில துணை செயலாளர் மு வீரபாண்டியன் துவக்க உரையாற்றினார்

மாவட்ட தலைவர் டி எஸ் நாராயணராஜ் தலைமை தாங்கினார்

மாவட்ட மாநில செயலாளர் C. மாரி வரவேற்புரை வழங்கினார்

மாநில பொதுச் செயலாளர் டி தனசேகரன் மாநில பொருளாளர் கே கோவிந்தராஜ் மாநில செயலாளர் பி எம் மணிகண்டன் ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினர்

மாநில துணை தலைவர் ஏ ஐ டி யு சி ஏ எஸ் கண்ணன் மாவட்ட தலைவர் எஐடியு சி கே கஜேந்திரன் மாவட்ட செயலாளர் சி குருமூர்த்தி வி சரவணன் மேற்கு மாவட்ட தலைவர்  தாமோதரன்

மாவட்ட இணை செயலாளர் M.செல்வம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்

மாநில தலைவர் தோழர் நா. பெரியசாமி அவர்கள் நிறைவுறையாற்றினார்

மாவட்ட பொருளாளர் ஏ கே லிங்கேஸ்வரன் நன்றி தெரிவித்தார்

உண்ணா விரதத்தில்

இறந்த பணியாளர்கள் குடும்பத்தில் இருந்து சுமார் 20 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கலந்து கொண்டனர்.

மாநில தலைவர் அவர்களிடம் வாரிசு வேலை வாங்கித் தர வேண்டி மனு அளித்தனர்

மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள், துணைத் தலைவர்கள் , துணை செயலாளர்கள், வட்டார பொறுப்பாளர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள்

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் , சென்னை, காஞ்சிபுரம் , சென்னை மண்டல தோழர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த உண்ணாவிரத  போராட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்த

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தோழர்கள் மற்றும் சென்னை மண்டல தோழர்கள் மற்றும் இறந்த பணியாளர்கள் குடும்பங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்

இப்படிக்கு

ஏ ஐ டி யு சி தொழிற்சங்கம்

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்.

 

Exit mobile version